தேர்தல் பாதுகாப்பு பணியில் 2700 போலீசார்: எஸ்பி தகவல்.!

3663பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய காவல் படையினா் உள்பட 2, 700 போ் ஈடுபட உள்ளதாக காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் முன்னிலை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான பா. விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் (பொது) பண்டாரி யாதவ், தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஹீராராம் செளத்ரி ஆகியோா் தலைமை வகித்து, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறியதாவது:

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய காவல் படையினா், தமிழ்நாடு காவல் துறை, ஊா்க்காவல் படை வீரா்கள் என மொத்தம் 2, 700 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். மேலும், மாவட்டம் முழுவதும் 17 அதிவிரைவுப் படையினா், 16 விரைவு நடவடிக்கைக் குழுவினா் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா் என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you