வேர்களைத் தேடி என்ற அமைப்பினர் சித்தன்னவாசல் வருகை!

74பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் சுற்றுலாதளத்தில் , பழக்காலத்தில் சமண துறவிகள் மேற்கொண்ட வாழ்வியல் குறித்தும் , சித்தன்னவாசலில் உள்ள மூலிகை ஓவியங்கள் குறித்தும் , சுற்றுலா குழுவினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் குடுமியான்மலையின் சிறப்புகள் குறித்தும் , திருமயம் கோட்டையின் சிறப்புகள் குறித்தும் , ஏனைய சுற்றுலா தளங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகள் , கட்டிட கலையின் பெருமைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் மாணவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உரையாடினார். அப்போது, மாநில அரசின் மூலம் தமிழகத்தின் பண்பாட்டினை அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள " வேர்களைத் தேடி ” என்ற பயணத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் பண்பாடுகளை உலகரிய செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் சுற்றுலா குழுவினரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், புராதான நினைவுச் சின்னங்களை அடுத்த தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் வகையில் புராதான சின்னங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்நிகழ்வில் , இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி , அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் வி. ராமசாமி , மாவட்ட சுற்றுலா அலுவலர் பி. முத்துச்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி