புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து சிகப்பு அட்டைதாரர்களுக்கு மாதாந்தோரும் 20 கிலோ அரிசியும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட காந்தி நகரில் உள்ள ரேஷன் கடையில் அப்பகுதி மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அரசு கொறடாவும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.