நீலகிரியில் போராட்டம்

50பார்த்தது
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்தனர். போராட்டம் காரணமாக இதுவரை நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக முதலில் உள்ள நீலகிரி மாவட்ட மருத்துவர்கள் சங்கம் மற்றும் தேசிய மருத்துவர் சங்கம் நீலகிரி மாவட்டம் சார்பாக அரசு சேட் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை கண்டன பேரணி நடைபெற்றது இப்பேரணியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you