மதுரை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் இன்று (பிப். 25) திருமங்கலம் எஸ்பிஐ வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பாஜக அரசை கண்டித்து மாணவர்களின் கூட்டமைப்பு சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.