மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி காலனியைச் சேர்ந்த தவசி (57) என்பவர் டிரைசைக்கிள் ஓட்டி வந்துள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் தவசியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.