மதுரை மாவட்டம் அலங்கானல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் சுற்றுலா துறை சார்பில் இன்றும் நாளையும் (மார்ச் 1, 2) கலைவிழா நடத்தப்படுகிறது.
இந்த அரங்கத்தில் இன்று மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை கானா பாடல்கள், டோல் இசை, நாளைய தினம் (மார்ச் 2) மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை நையாண்டி மேளம், பூங்கரகம், அடுக்கு கரக நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.