லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மூவரில் இருவர் கைது
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மாவத்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் செந்தில்குமார் வயது 43. இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 18ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் செங்காட்டுப்பட்டி பகுதியில் உள்ள சரோஜா என்பவரது தோட்டத்தில் தனது லாரியை நிறுத்தி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த, கடவூர் தாலுக்கா, பாலவிடுதி அருகே உள்ள தாழியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், ஆறுமுகம், ரவி கண்ணன் ஆகிய மூன்று பேரும், லாரியை சுத்தம் செய்து கொண்டு இருந்த செந்தில்குமாரிடம் தகாத கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து கோபமடைந்த இளங்கோவன், ஆறுமுகம், ரவி கண்ணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக செந்தில்குமார் பால விடுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியின் கண்ணாடியை உடைத்த இளங்கோவன், ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ரவி கண்ணன் மட்டும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. பாலவிடுதி காவல்துறை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.