மை லைஃப் ஸ்டைல் மார்க்கெட்டிங்-ஆடல் பாடலுடன் அமர்க்களம்.

1058பார்த்தது
கரூரில், மை லைஃப் ஸ்டைல் மார்க்கெட்டிங் நிறுவனத்தாரின் புத்தாண்டு கொண்டாட்டம். ஆடல் பாடலுடன் அமர்க்களம். கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எதிரில் உள்ள தனியார் மண்டபத்தில், மை லைஃப் ஸ்டைல் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில், இந்த நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் புத்தாண்டு தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வமணி, சசிகுமார், சுமதி சசிகுமார், தங்கராஜ் உள்ளிட்ட இந்த நிறுவனத்தின் தொடர் அமைப்பாளர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நிறுவனத்தின் வெற்றிக்கு அயராது உழைத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆண்கள், பெண்கள் தனித்தனியாகவும், மேடையிலும் பாடலுடன் ஆட்டம் ஆடி அனைவரையும் கவர்னர். இந்த நிகழ்ச்சியில் முனைப்போடு செயல்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வமணிக்கு நினைவு பரிசாக தங்கவாள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி