4 கிலோமீட்டர் மலையை சுற்றி நிலைக்கு வந்த தேர்

1891பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் மிகவும் பிரசித்து பெற்ற இரத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 நாட்கள் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகின்றது. இந்த கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இக்கோவிலின் மலையை சுற்றி வடம் பிடித்து இழுக்கப்பட்ட இந்த தேர் இன்று நிலைக்கு வந்தடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்திருந்து தேரை வடம்பிடித்து இழுத்து சாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து சாமியை வழிபட்டு சென்றனர்.

இந்த தேரோட்டத்தில் ஊர்முக்கியஸ்தர்கள், கோவில் குடிபாட்டுகாரர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், குளித்தலை சுற்றியுள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழாவின் இறுதிநாளான நாளை இரவு மஞ்சள் நீராடுதலுடன் விழா முடிவடைகின்றது.

திருவிழா நிகழ்ச்சிக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.