பெருஞ்சாணி: 13 அடி நீள ராஜ நாகம்; பரபரப்பு

561பார்த்தது
குமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுருளகோடு பிரிவில் பெருஞ்சாணி குடியிருப்பு பகுதியில் ராஜ நாகம் ஒன்று நேற்று (25-ம் தேதி)  சுற்றி வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

       இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் வேளிமலை வனச்சரக அலுவலர் ராஜேந்திரன் வழிகாட்டுதலின் பேரில், சரக பணியாளர்கள் பெருஞ்சாணி குடிப்பு பகுதியில்  சென்று பின்னர் அங்கிருந்த ராஜநாகத்தை பிடித்தனர். பின்னர்  வீரபுலி காப்புக்காடு பகுதிக்கு கொண்டு சென்று அடர்ந்தவன பகுதிக்குள் விட்டனர்.

தொடர்புடைய செய்தி