புதுக்கடை: தடை செய்த புகையிலை - 70 மதுபாட்டில்கள் பறிமுதல்

67பார்த்தது
புதுக்கடை: தடை செய்த புகையிலை - 70 மதுபாட்டில்கள் பறிமுதல்
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் தலைமையிலான போலீசார் நேற்று (பிப்.1) காப்புக்காடு பகுதி வெட்டுக்காடு என்ற இடத்தை சேர்ந்த ராம் மோகன் (48) என்பவர் வீட்டில் சோதனையிட்டனர். 

அப்போது அங்கு கணேஷ் புகையிலை 5 ஆயிரத்து 40 எண்ணம் கொண்ட 42 பாக்கெட்டுகளும், கூல்லிப் புகையிலை 3 ஆயிரத்து 328 எண்ணம் கொண்ட 16 பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ராம் மோகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுபோன்று தேங்காபட்டணம் பகுதி பனங்கால் முக்கு பகுதியில் சந்திரன் (50) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்த 70 பாட்டில் மதுபானங்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி