மாமல்லபுரத்தில் தவெக ஆண்டு விழா நடைபெற உள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெற உள்ள ஆண்டு விழா நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜயை வரவேற்பதற்கு வரவேற்பு பேனர்கள் கிழக்கு கடற்கரை சாலை எங்கிலும் கட்சி நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு விழா நடைபெறும் நட்சத்திர விடுதியின் நுழைவு வாயில் அலங்கரிக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.