ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் 108 சங்காபிஷேகம்

55பார்த்தது
சித்ராபொளர்ணமியையொட்டி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் 108 சங்காபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குடி  பேரம்பாக்கத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ருத்ராம்பிகை சமேத ஶ்ரீ ருத்ரேஸ்வரர் மற்றும் அருள்மிகு திரிபுராம் பிகை சமேத குமரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிவுற்று சித்ரா பௌர்ணமியன்று முதலாவதாக 108 சங்காபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் சித்ரா பொளர்ணமியன்று 108 சங்குகளை கொண்டு மூலவர் ருத்ரேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெறும். அவ்வாறு இன்று சித்ரா பொளர்னமியையொட்டி யாகசாலையுடன் ஒரு பிரதான கலசம் அமைத்து 108 வலம்புரி சங்குகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்த புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார் கொண்டு சென்று மூலவ பகவானுக்கு அபிஷேகம் செய்ததை தொடர்ந்து 108 சங்குகளை கொண்டு அதிலிருந்த புனித நீரினை ஊற்றி மூலவர் ருத்ரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவருக்கு மஹா தீபாராதனை நடை பெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் திருச்சிற்றம்பல அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you