மதுராந்தகம்: ஆபத்தான நிலையில் நிற்கும் வாகனங்கள்

3264பார்த்தது
மதுராந்தகம்: ஆபத்தான நிலையில் நிற்கும் வாகனங்கள்
ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள் பார்க்கிங் சீட்டு கோவில் அருகில் வழங்குவதால் ஆபத்தான மலைப்பகுதியில் இருபுறமும் நிற்கும் வாகனங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூர் மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அறநிலை துறைக்கு சொந்தமான பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதற்காக பல பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் இங்கு பார்க்கிங் சீட்டு வழங்குவது மலையின் அடிவாரத்தில் வழங்குவது வழக்கம் இம்முறை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக ஏலம் விடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது இவர்கள் மலையின் மேல் உள்ள கோவில் அருகே வசூல் செய்வதால் கார்கள் செல்ல முடியாமல் மாலையின் மேல் செல்லும் பாதையில் இருபுறமும் கார்களை ஆபத்தான நிலையில் பக்தர்கள் நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்வதற்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர் பொதுமக்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி