சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.00 மணிக்கு 1000க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி ரயில் திண்டிவனம் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள கரசங்கால் பகுதியில் தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பாண்டிச்சேரி ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்டவாளத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்ததால் தற்போது திண்டிவனம் நோக்கி ரயில் சென்றுகொண்டிருக்கிறது.