மக்கள் நீதிமன்றத்தில் 292 பயனாளிகளுக்கு இழப்பீடு

57பார்த்தது
மக்கள் நீதிமன்றத்தில் 292 பயனாளிகளுக்கு இழப்பீடு
காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல் வழிகாட்டுதலின்படி, தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில், வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர், காஞ்சிபுரம் முதன்மை சார்பு நீதிபதி கே. எஸ். அருண் சபாபதி தலைமையில், நேஷனல் லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வசந்தகுமார், காஞ்சிபுரம் கூடுதல் சார்பு நீதிபதி திருமால், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சதீஷ்குமார், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிபதி இனியா கருணாகரன், காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் பத்மநாபன், சத்தியமூர்த்தி, கீதா, விநாயகம், கோவிந்தசாமி, பரணி மற்றும் காப்பீட்டு நிறுவன வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன், காசோலை, நில ஆர்ஜிதம், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

காஞ்சிபுரம் வட்டம் முழுதும் எடுத்துக் கொள்ளப்பட்ட 1, 800 வழக்குகளில், 292 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டு, இழப்பீட்டு தொகையாக. 12 கோடியே 46 லட்சத்து 85, 211 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

வங்கி வழக்குகள் 1, 790 எடுக்கப்பட்டு, 98 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 50 லட்சத்து 19, 700 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி