கள்ளக்குறிச்சி அடுத்த மேலூர் முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் பாஸ்கர் வரவேற்றார். சென்னை ரானே மெட்ராஸ் மனிதவள மேலாண்மை அதிகாரி சதிஷ்குமார், மாதவன் ஆகியோர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
நேர்காணலில் இயந்திரவியல், ஆட்டோமொபைல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளில் 120 மாணவர்களிடையே நேர்காணல் நடத்தப்பட்டது. முதல் தேர்வில் 48 மாணவர்கள் தேர்வாகினர். தேர்வான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு தங்கும் விடுதி வசதியுடன் பணியில் அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. கல்லூரி துறை தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.