ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது

64பார்த்தது
ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700 -க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த மாதம் மழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து காய்கறிகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்து கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. இன்று வ.உ.சி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கத்திரிக்காய் - 35, வெண்டைக்காய் - 25, பாவக்காய் - 35, பீர்க்கங்காய் - 35, முள்ளங்கி - 30, முருங்கைக்காய் - 40, பச்சை மிளகாய் - 60, முட்டைகோஸ் - 40, உருளைக்கிழங்கு - 50, கேரட் - 90, பீட்ரூட் - 60, கோவக்காய் - 35, சவ் சவ் - 25, கொத்தவரங்காய் - 25, சேனக்கிழங்கு - 80, கருனக்கிழங்கு - 150, இஞ்சி - 150, பீன்ஸ் - 70, சுரக்காய் - 10, கருப்பு அவரை -100, பட்டவரை - 80, தக்காளி - 10 முதல் 20 வரை, சின்ன வெங்காயம் - 40, பெரிய வெங்காயம் - 60.
பெரும்பாலான காய்கறிகள் விலை குறைத்தாலும், ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.
Job Suitcase

Jobs near you