ஈரோடு: இன்ஸ்டா பிரபலம் ராகுலின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

588பார்த்தது
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே இன்ஸ்டாகிராம் பிரபலம் ராகுல் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து ராகுலின் மனைவி தேவிகா ஸ்ரீ செய்தியாளர்கள் சந்திப்பின்போது கணவர் வீட்டார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர் ராகுலின் தந்தையை தொடர்பு கொண்டு கேட்டபோது குடும்பம் என்றால் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், தேவிகா ஸ்ரீ நாங்கள் பெற்ற பிள்ளையைப் போலத்தான் பார்த்துக் கொண்டோம்.

தற்போது கூட தேவிகா ஸ்ரீயை தங்களது வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்ற முடிவில் தான் இருந்தோம், இவ்வாறு தொலைக்காட்சிகள் மூலமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் என்ன செய்வது, தேவிகா ஸ்ரீ நான் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது, அவரது உறவினர்களிடம் பேசியபோது வீட்டுக்குச் சென்று தேவிகா ஸ்ரீயிடம் தொலைபேசியை கொடுப்பதாக தெரிவித்தனர், 

இறந்த ராகுலின் இறுதிச் சடங்கு முடிந்த தேவிகா ஸ்ரீ வீட்டிற்கு அழைத்துச் செல்லும் எண்ணத்தில் இருந்தோம் ஆனால் அவர்களே கார் ஏறி கவுந்தப்பாடியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று விட்டனர். இதுவரை அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மனிதனாக பிறந்த அனைவருக்கும் சிறிய கெட்ட பழக்கம் ஆவது இருக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி