இராமலிங்கம்பட்டி: முருகன் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம்

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி போகர் நகரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 16 அடி ஆழத்தில் பாதாள செம்பு முருகன் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வருகை புரிந்தார். முன்னதாக பாதாள செம்பு முருகன் கோவிலில் அமைந்துள்ள நூலகத்தை பார்த்து மகிழ்ந்தார். 

பின்னர் கோவிலின் பாதாளத்தில் அமைந்துள்ள செம்பு முருகன் முன்பு முருகன் பாடலை மனமுருகி பாடி சாமி தரிசனம் செய்தார். பாதாள செம்பு முருகன் கோவிலில் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்படும் என்ற பதாகையை பார்த்த மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் வியந்து மகிழ்ந்து கோயில் அறங்காவலரை பாராட்டினார். பாதாள செம்பு முருகன் கோவிலில் விற்கப்படும் கருங்காலி மாலையை வாங்கி மதுரை ஆதீனம் அணிந்துகொண்டார். பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தந்த மதுரை ஆதீனத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி