கடத்தூரில் ரூ. 3.84 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

52பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை சந்தை நடக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வெற்றிலை வாங்க வருகின்றனர். நேற்று(செப்.22) சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய சந்தையில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ. 8000 முதல் ரூ. 16, 000 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் ரூ. 4000 வரை விலை குறைந்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் வெற்றிலை நன்கு வளர்ச்சியடைந்து விளைச்சல் அதிகரிக்கும். இதனால் வரத்து அதிகரித்தது. அதனால் மூட்டைக்கு ரூ. 4000 விலை குறைந்தது. இந்த மாதம் முழுவதும் விலை குறைந்து தான் விற்பனையாகும் என்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 24 மூட்டை வெற்றிலை ரூ. 3 லட்சத்து 84 ஆயிரத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you