மது விற்றவர் கைது 26 பாட்டில் பறிமுதல்

71பார்த்தது
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட தாளநத்தம்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக, நேற்று போலீசாருக்கு ரகசியதகவல்கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ முகிராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு
பணியில் ஈடுபட்டனர். அப்போது, மதுபதுக்கி விற்றதாக அருள் வயது (45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ₹3, 144 மதிப்பிலான 26 மது பாட்டில்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி