உலகத் தாய்மொழி தின நல்வாழ்த்துகள், ஆயிரம் அந்நிய சக்திகள் அன்னைத் தமிழை அழிக்க நினைக்கும் போதிலும் எங்கள் திராவிட மாடல் முதல்வர் துணையோடு தாய்மொழியாம் தமிழ் மொழியை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் ரூ. 1, 476 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருக வருக என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் தெரிவித்துள்ளார்.