கார் திருட்டு-மர்ம நபரை தேடும் போலீசார்

4221பார்த்தது
கார் திருட்டு-மர்ம நபரை தேடும் போலீசார்
கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் 49 வயதான பிரான்சிஸ். மார்க்கெட்டிங் ஊழியர். இவர் வீட்டு முன்பு மாருதி ஆல்டோ காரை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காரை காணவில்லை. மர்ம நபர்கள் நைசாக காரை திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரான்சிஸ் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி