கோவை: இலவச வீடுகள் பெற்று தருவதாக மோசடி

65பார்த்தது
கோவை: இலவச வீடுகள் பெற்று தருவதாக மோசடி
கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அண்ணாதுரை என்பவரின் மகன் தம்பிதுரை, குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருவதாகவும், மேலும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

நீண்ட நாட்கள் கடந்தும், பணம் கொடுத்தவர்களுக்கு வீடும் கிடைக்கவில்லை, அரசு வேலையும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டுவந்ததால், திடீரென தம்பிதுரை தலைமறைவானார். இந்த முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை, குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 12) தம்பிதுரை தைப்பூச திருவிழாவிற்காக வீட்டிற்கு வந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். நிலமை மோசமாவதை உணர்ந்த குனியமுத்தூர் காவல்துறையினர் தம்பிதுரையை வீட்டில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி