விநாயகர் சதுர்த்தி- பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்வு!
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் அலங்காரத்திற்கான பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி, 800 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. செவ்வந்தி பூ கடந்த வாரம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் 200 முதல் 300 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ரோஜா பூக்களின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கின்றன. விநாயகர் அலங்காரத்துக்கு தேவைப்படும் தென்னை குருத்து தோரணம், மா இலை தோரணம், எருக்கம் பூ மாலை உள்ளிட்ட பூஜை மலர் மற்றும் தோரணங்களின் விலையும் உயர்ந்திருக்கின்றன. விலை உயர்ந்த போதிலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்பதனால், பூ வாங்க வேண்டும் என தெரிவித்த பெண்கள், ரோஜா, செவ்வந்தி மல்லி போன்ற பூக்களை வாங்கி செல்கின்றனர்.