சென்னை: ஏழை பள்ளி குழந்தைகள் 3வது மொழியை கற்க கூடாதா? - ஜி. கே. வாசன்

64பார்த்தது
சென்னை: ஏழை பள்ளி குழந்தைகள் 3வது மொழியை கற்க கூடாதா? - ஜி. கே. வாசன்
தமிழகத்தில் வசதி பெற்றவர்கள் 3-வது மொழி கற்கலாம். ஆனால், ஏழை குழந்தைகள் கற்கக் கூடாதா? என்று தமாகா தலைவர் ஜி. கே. வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமாகாவின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை எழும்பூரில் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் நடந்தது. 

இதில் துணைத்தலைவர்கள் விடியல் சேகர், இ. எஸ். எஸ். ராமன், பொதுச்செயலாளர் ஜி. ஆர். வெங்கடேஷ் மற்றும் மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஜி. கே. வாசன் பேசியதாவது, 3-வது மொழியை யாரும் படிக்கக்கூடாது என்று தெரிவித்தால், பிற மாநிலங்களில் தமிழ் மொழியை கற்க மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள். தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த அரசியல். கட்டாயம் இந்த மொழி தான் கற்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கையில் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் தாய்மொழி தான் அவசியம். தமிழகத்தில் தமிழ்தான் முக்கியம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. 

2-வது மொழி ஆங்கிலம். அதிலும் மாற்று கருத்து கிடையாது. அதே நேரம், வசதி பெற்றவர்கள் மட்டுமே 3-வது மொழி கற்கக்கூடிய சூழல் உள்ளது. ஏழை மக்களின் குழந்தைகள் இன்னொரு மொழியை கற்கக் கூடாதா? தங்களின் அரசியலை திணிப்பதற்காக மாணவர்கள் விஷயத்தில் தமிழக அரசு செயல்படுவது வருத்தமாக உள்ளது என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி