முதியவர் உயிரிழந்தது கள்ளச் சாராயத்தால் அல்ல - அமைச்சர்

59பார்த்தது
முதியவர் உயிரிழந்தது கள்ளச் சாராயத்தால் அல்ல - அமைச்சர்
புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயப் பாக்கெட்டுகளை குடித்ததால், விழுப்புரம் அருகே ஒருவர் உயிரிழந்தார் என்றும், இந்த உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை எனவும் அமைச்சர் எஸ். ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முருகன் என்பவர் புதுச்சேரி, மடுகரை அரசு சாராயக்கடை எண். 1-ல் சாராயப் பாக்கெட்டுகளை வாங்கியது உண்மை என்று தெரியவந்துள்ளது. முருகன் மற்றும் சிவசந்திரன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் 30. 06. 2024 அன்று இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து மூவரின் ரத்த மாதிரிகளையும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அவர்கள் அருந்தியது எத்தனால் (Ethanol) என்றும், மெத்தனால் எதுவும் இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை கள்ளச் சாரய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் காவல் துறையினர் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே, இந்த உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you