குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமானது - அமைச்சர் உதயநிதி

73பார்த்தது
குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமானது; குழந்தைகளை பள்ளிக்கு மட்டும் அனுப்புங்கள், மற்றதை அரசு பார்த்துக்கொள்ளும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்ணப்பர் திடலில் வீடற்றவர்களுக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை மூர் மார்கெட் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தா. மோ அன்பரசன் மற்றும் தயாநிதி மாறன் எம். பி. , சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடற்ற குடும்பங்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமான ஒன்று. குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைவரும் தங்கள் குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்புங்கள். உங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பினால் மட்டும் போதும், மற்றதை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you