வங்கதேச காபந்து அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) அரசின் தலைவராக பதவியேற்றார். ஜனாதிபதி அலுவலகமான 'பங்கா பாபானில்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அதிபர் முகமது ஷஹாபுதீன், யூனுசுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா சமீபத்தில் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.