தலைமையை கையில் எடுக்கும் சசிகலா?

12940பார்த்தது
தலைமையை கையில் எடுக்கும் சசிகலா?
மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இது அதிமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அதிமுக ஒன்றுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். 'ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக கட்சி அழிவதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. இனியும் நான் பொறுமையாக இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகிவிடும். இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது. தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள், உங்கள் அனைவரையும் ஜெயலலிதா இல்லம் வரவேற்கிறது' என சசிகலா கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி