முதியவரின் கருத்து இந்திய அரசை கவிழ்க்குமா?

1531பார்த்தது
முதியவரின் கருத்து இந்திய அரசை கவிழ்க்குமா?
அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ், பிரதமர் மோடி அரசு இந்திய ஜனநாயகத்தை சிதைத்து வருவதாக கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு மத்திய அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.சிதம்பரம் 92 வயது முதியவரின் தவறான அறிக்கையில் கவிழும் அளவிற்கு பிரதமர் மோடியின் அரசு பலவீனமாக உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அரசை இந்திய மக்கள்தான் தீர்மானிப்பார்கள். ஒரு முதியவரின் கருத்தை அரசை கவிழ்க்கும் முயற்சி என்று முத்திரை குத்துவது சிறுபிள்ளைதனமானது என கூறியுள்ளார்.