அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது கணவரை கொல்ல காபியில் விஷம் கலந்துள்ளார். ராபி ஜான்சன் (34) என்ற இளைஞர் மனைவி கொடுக்கும் காபியின் சுவை மாறியதைக் கவனித்து வந்துள்ளார். பின்னர் டெஸ்டிங் ஸ்ட்ரிப் மூலம் சோதித்தபோது காபியில் குளோரின் அளவு மிக அதிகமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினார். அதில், காபியில் அவரது மனைவி விஷம் கலந்தது தெரிய வந்துள்ளது. கணவன் இறந்தால் வரும் இன்சூரன்ஸ் பணத்துக்காக அந்த பெண் இவ்வாறு செய்துள்ளார்.