ராஜஸ்தான் முதலமைச்சர் யார்..? - இன்று அறிவிப்பு

350பார்த்தது
ராஜஸ்தான் முதலமைச்சர் யார்..? - இன்று அறிவிப்பு
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115-ல் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் அம்மாநில முதலமைச்சர் யார்? என பாஜக தலைமை அறிவிக்காமல் உள்ளது. இந்த சூழலில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.