“நிரந்தரத் தீர்வு எப்போது?”- பாஜகவுக்கு இபிஎஸ் கண்டனம்

62பார்த்தது
“நிரந்தரத் தீர்வு எப்போது?”- பாஜகவுக்கு இபிஎஸ் கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆக.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட முயற்சிகள் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி