வயநாடு நிலச்சரிவு: குடும்பத்தினரை இழந்து தனிமரமாய் நிற்கும் நபர்

69பார்த்தது
வயநாடு நிலச்சரிவு: குடும்பத்தினரை இழந்து தனிமரமாய் நிற்கும் நபர்
வயநாடு நிலச்சரிவில் தன் குடும்பத்தை சேர்ந்த 16 பேரை இழந்து தனியாக மரமாக நிற்கும் மன்சூர் (42) என்ற நபரின் பரிதாப நிலை பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டபோது மன்சூர் வெளியூருக்கு சென்றதால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து, மன்சூரின் தாய், மனைவி, மகள்கள் உள்ளிட்டோரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வயநாட்டில் இயற்கையின் கோர தாண்டவத்தால் மன்சூரை போன்ற பல பேர் தங்கள் குடும்பத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி