காரியாபட்டியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது

64பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் கருமேகத்துடன் காட்சியளித்த நிலையில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஆவியூர், கல்குறிச்சி, முடுக்கன்குளம், மரைக்குளம், போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி