மனைவியை தாக்கிய கணவன் குடுபத்தினர் மீது புகார்

4454பார்த்தது
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி வயது 27. இவர் கணவர் சுந்தரம். இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. மாரீஸ்வரி வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து வருவதாகவும் அவருடைய கணவர் சுந்தரம் வேலைக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் லோன் எடுத்து வீடு கட்டி இருந்ததாகவும் அந்த கடன் தொகையை திரும்ப செலுத்த மாரீஸ்வரன் கணவர் சுந்தரம் சரிவர பணம் தராத நிலையில் குடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்த நிலையில், சுந்தரத்தின் தாய் சரோஜா, சகோதரி மகாலட்சுமி ஆகிய இருவரும் சுந்தரத்துடன் சேர்ந்து கொண்டு மாரீஸ்வரியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காயமடைந்த மாரீஸ்வரி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி