விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கெப்பிலிங்கம்பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ரயில்வே கீழ் பாலம் அமைந்துள்ளது. இவ்வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விருதுநகருக்கு தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது பெய்த மழையினால் பாலத்தின் கீழ் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இந்த ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றி விருதுநகருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.