விருதுநகர் மாவட்ட அதிமுக கட்சியினருக்கு, முன்னாள் அமைச்சர் புத்தாண்டு வாழ்த்துகள்.
விருதுநகர் மாவட்ட, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி அதிமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு '2024' ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினார். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி சார்பில் தினசரி காலண்டர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அமைச்சர் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.