சிவகாசி: பட்டாசு உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும்...

559பார்த்தது
தீபாவளிக்கு முன் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளிக்கு முன் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் டிஆர்ஓ உரிமம் பெற்ற 50க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் டிஆர்ஓ உரிமம், சென்னை உரிமம், நாக்பூர் உரிமம் பெற்று 1100க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. பட்டாசு ஆலை தொடர் விபத்து காரணமாக தீபாவளிக்கு முன்னர் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது வெடிபொருள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 80 மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இரு மாதங்களுக்கு மேல் ஆவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டதில் டிஆர்ஓ உரிமம் பெற்ற 50க்கும் மேற்ப்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி