சிவகாசி: 4 ஆம் திருவிழா, "வேதாள வாகனத்தில் "அம்மன் வீதி உலா..

66பார்த்தது
சிவகாசி: 4 ஆம் திருவிழா, "வேதாள வாகனத்தில் "அம்மன் வீதி உலா..
சிவகாசியில் 'வேதாள' வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவிலில், பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 4ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது. இதனையடுத்து, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் "வேதாள' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :