நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது

79பார்த்தது
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் அருகே எம். சின்னையாபுரம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்பெற்ற பாதமுத்து எழுதிய நினைவலையில் மலர்ந்த நித்திலப் பூமாலை நூல் வெளியீட்டு விழா எம். சின்னையாபுரத்தில் ஊராட்சி. மன்ற
தலைவர் கூழ்வளந்தான் தலைமை யில் நடைபெற்றது. நூலினை காந்தி கிராம பல்கலை கழகம் அரசியல் மற்றும் நிர்வாக
வளர்ச்சி துறை மேனாள் தலைவர் பேராசிரியர் ரகுபதி வெளியிட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பொதுசெயலாளர் மருத்துவர். அறம் பெற்றுக்கொண்டார். அதன் பின் நூலின் ஆசிரியர் பாதமுத்து ஏற்புரை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முன்னாள் மாணவர்கள் சுந்தரமூர்த்தி,
ராமமூர்த்தி, கணேசன், சுரேஷ், தங்கப்பாண்டி, கனகாம்பிகா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் விஜயபாலன், மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி