ராஜபாளையத்தில் அரசு பேருந்தும். ஆட்டோ ஓட்டுனர்கள் வாக்குவாதம்

51பார்த்தது
இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் அரசு பேருந்துத்தை
அருள்புத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் பாலு ஓட்டிவந்துள்ளார் அப்பொழுது பழைய போருத்துநிலையம் அருகே ஆட்டோ ஒன்று நின்றுள்ளது ஹாரன் அடித்து ஆட்டோவை எடுக்க கூறியுள்ளார் ஆட்டோ டிரைவர் கவனிக்காமல் இருந்ததை அடுத்து தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார் இதனால் ஆட்டோ ஓட்டுனருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து அப்பொழுது அப்பகுதிக்கு வந்த அரசு பேருந்து ஓட்டுனர்களும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அரசு பேருந்து ஓட்டுநர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க சென்றுள்ளார் அங்கிருந்து அவரை இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர் இதனால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பழைய பேருந்துநிலையம் அருகே ஆட்டோவை சாலையில் நிறுத்தி இருக்கும் பொழுது கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறாக இருப்பது வழக்கமாக உள்ளது ஆகையால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி