பெண்ணை ஏமாற்றியவர் மீது போலீசார் வழக்கு பதிவு

1303பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணை கள்ளக்குறிச்சியை சேர்ந்த சபரிநாதன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.7 லட்சம் பணம், 10 பவுன் தங்க நகைகள் பெற்று கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு சபரிநாதன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் அடிப்படையில் டவுன் போலீசார் சபரிநாதன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி