வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

61பார்த்தது
வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ 8 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். டிசம்பர் 31 அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் மதுரை செல்லும் பிரதான சாலையில் பரந்தசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ 7 கோடி மதிப்பில் வாறுகால் கட்டும் பணி, சிறு பாலங்கள் அமைக்கும் பணி தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற உள்ளது. இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதே போல பெரிய வள்ளிகுளம், ராஜீவ் நகர், பொய்யாங்குளம், எம். தொட்டியாங்குளம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும், மேலும் குறிஞ்சாங்குளம் பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ 8 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொது பணித்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி