வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கு வினேஷ் போகத் தகுதியானவர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுரவ் கங்குலி, "எனக்கு சரியான விதி தெரியாது, ஆனால் வினேஷ் கோகதி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். எனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றபோது, தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.