வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

52பார்த்தது
வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் , வீடூர் அணையின் , அணை பாசன ஆயக்கட்டுதாரர்கள் கூட்டத்தில் அணையில் தண்ணீர் இருப்புக்கு ஏற்ற வாறு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்திரவிட்டார்.

நேற்று காலை அமைச்சர் மஸ்தான் தண்ணீரை திறந்து வைத்து பாசன வாய்க்காலில் பூ துாவி வரவேற்றார்.

விழாவில் மயிலம் எம். எல். ஏ. , சிவகுமார், மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சோபனா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், இளநிலை பொறியாளர் பாபு, புதுச்சேரி மாநில இளநிலை பொறியாளர் ஞானசேகரன், தாசில்தார்கள் திண்டிவனம் சிவா, வானூர் நாராயண மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி பிரகாஷ், மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி தமிழரசன், அஞ்சாலாட்சி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் செழியன், மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பானுமதி, ஜெய்சங்கர், மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், மாநில பொதுக்குழு ரவி , விவசாய அணி துணை தலைவர் நெடி சுப்பிரமணி, பா. ம. க. , ஒன்றிய செயலாளர் சேட்டு, அணி நிர்வாகிகள் அன்சாரி, பரசுராமன், பழனி, நாகராஜ், ஆயக்கட்டுபாசன சங்க நிர்வாகிகள், வருவாய் துறை அலுவலர்கள், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி