வாலிபர் இறப்பு - மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை

1083பார்த்தது
வாலிபர் இறப்பு - மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியத்தால் உயிரிழந்த அருண் குமார் என்ற இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டியில் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி